கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த 12ஆம் திகதி முதல் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இலங்கை அரசியலில் ‘கிங் மேக்கராக’ திகழ்ந்த மங்கள பின்சிறி சமரவீர இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் அவருடைய இறுதிக் கிரியைகள் அனைத்தும் பொரளை பொது மயானத்தில் இன்று(24ஃ8) நடைபெற்றிருந்தது. கொரோனா தொற்றால் உயிரிழந்தமையால் அவரின் இறுதிக்கிரியையில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இறுதிக்கிரியைகளின்போது மங்கள சமரவீரவின் சகோதரி ஜயந்தி சந்திரானி மற்றும் சகோதரியின் மகள் ஆகியோர் உடன் இருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.