உலக அங்கிலிக்கன் திருச்சபை
உலக அங்கிலிக்கன் திருச்கபையானது சம சகோதர கூட்டுறவு தேசிய திருச்சபைகளாக அமைக்கப்பட்டு 850 லட்ச அங்கத்தவர்களையுடையது. ஓவ்வொரு தேசிய சபையும் ஒரு மாகாணமாகும். அதன் தலைவர் பேரத்தியட்சர் (ஆச்பிஷப்) எனப்படுவார். இங்கிலாந்திலுள்ள லம்பத் பேரத்தியட்சர் சமமான பேரத்தியட்சர்களில் முதல்வராவர். ஒவ்வொரு மாகாணத்தின் கீழ் குறைந்தது 3 மறைமாவட்டங்கள் என்றாலும் இருக்கும். அத்தியட்சர் (பிஷப்) மறைமாவட்டத்தின் தலைவராவார். ஓவ்வொரு மறைமாவட்டமும் தன் நிர்வாக வசதிக்காக, குருஸ்தலங்களாக ஒரு குருமுதல்வரின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும்.
லம்பத் மகாநாடு என்பது, 10 வருஷங்களுக்கு ஒருமுறை அங்கிலிக்கன் முதல்வரான கன்டபெரி பேரத்தியட்சரின் தலைமையில் அங்கலிக்கன் அத்தியட்சர்கள் அனைவரும் கூடும் மகாநாடாகும்.
இந்த அங்கிலிக்கன் சபைகள் அமைக்கப்பட்டபோது தேசிய திருச்சபைகள் பல லட்சக்கணக்கான மக்கனை கொண்டிருந்தன. மாகாணம் ஆகலும் பெரிதாக இருக்கக்கூடாது. ஆகவே இந்திய திருச்சபை ஒரு பெரிய திருச்சபையாக அமைக்கப்படாமல்;, தென் இந்திய, வட இந்திய என்று இரு திருச்சபைகளாக ஸ்தாபிக்கப்ட்டன. அதேவேளை தென் இந்தியாவில் பல நாடார் சாதியினர் இருந்தும் சாதி, இன அடிப்படையில் ஒரு திருச்சபையும் ஸ்தாபிக்கப்படவில்லை.
இதே போலவே இலங்கையில் 100,000 அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள் இருந்ததால் மாநிலஃமாகாண அல்லது மகாஅத்தியட்சர் பட்டங்கள் கிடைக்கவில்லை. இன்று பௌத்த அழுத்தத்தால் இலங்கையிலும் மியன்மாரிலும் கிறிஸ்தவ எண்ணிக்கை பெரிய வீழ்ச்சியை கண்டு எண்ணிக்கை முறையே 20,000, 70,000 ஆகியுள்ளது. இன்று மாகாண அந்தஸ்து இன்றி கன்டபெரி உயர் அத்தியட்சரின் மேற்பார்வையின் கீழ் இலங்கைத் திருச்சiபையையும் சேர்த்;து 5 திருச்சபைகளே உள்ளன.
லம்பத் பேரத்தியட்சர் தலைவராய் இருந்தும் அங்கிலி;க்கரின் மையம் தெற்கிற்கு இப்போ மாறுகிறது. ஆபிரிக்காவில் கடவுள் நம்பிக்கை உயர, 1970 இலுள்ள அங்கிலி;க்கன் எண்ணிக்கை 80 லட்சத்திலிருந்து 2015 இல் 570 லட்சம் ஆகியது. அதே காலப்பகுதியில் அமெரிக்காவில் பல ஜனாதிபதிகளை தந்த அங்கிலிக்கன் சபை கடவுள் நம்பிக்கையில் குறைய எண்ணிக்கையில் 40 லட்சத்திலிருந்து 20 லட்சத்திற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்கு எனது சொந்த உதாரணமாக, நான் மிச்சிகன் அங்கிலிக்கன் மறைமாவட்த்தில் அங்கத்தவராக சந்தோஷமாக குடும்பத்துடன் வணங்கி வந்தேன். நல்லாய் எம்மை பராமரித்த குரு இழைப்பாறிட எமது அத்தியட்சர் சபைக்கு அனுப்பிய குரு ஒரு பெண் மட்டுமல்ல, ஒரு பெண் குருவை கலியாணம் செய்ததால் கீழ்குறித்த கலியாணத்தை பற்றிய லம்பத் ஐ-10 பிரேரணையை மீறியவர் ஆவார். அக்;;கட்டத்தில்தான் பாப்பரசர் பெனடிக்ட் ஓஏஐ இப்படிப்பட்ட மாற்றங்களால் சங்கடப்படுத்தப்படும் அமெரிக்க அங்கிலிக்கன்மார் ரோமன் கர்த்தோலிக்க சபைக்கு வரலாம் என்று அழைப்பு விடுத்திருந்தார். நான் இந்த நிலையை கொழும்பு அத்தியட்சர் டிலோ கனகசபைக்கு விளக்கியபின் என் பல்கலைக்கழகத்திலிருந்த குருவானவர் அங்கேயே நானும் குடும்பத்தினரும் நியூமன் ஆலயத்தில் சாக்கிரமந்துகளை பெற ஒழுங்கு படுத்தியிருந்தார். இப்படிப்பட்ட நிலையே எண்ணிக்கை வீழ்ச்சிக்கு பெருங்காரணம்.
உலகரீதியாக ஆபிரிக்கரே இன்று அரைவாசியை கூடிய அங்கிலிக்கன் சபையினர் ஆவர். நம்பிக்கையற்றோர் மேற்கைய திருச்சபைகளில் ஆட்சியை கைப்பற்றியதால், திருச்சபையில் ஆத்மீக சம்பாஷணைகள் எமது களவு, கொலை, விபச்சாரம் போன்ற பாவங்களை விட்டு வறுமை, சூழல் அழிப்பு, இனவெறி போன்ற பாவங்கள் என்றுமாறியது. இன்று வட-தென் அங்கிலிக்கன் கருத்தரங்குகளிலும் பிரசங்கங்களிலும் இந்த பார்வை வித்தியாசத்தை அவதானிக்கலாம்.
அங்கிலிக்கன் வட-தென் பிளவு
மேற்கத்தேய நாடுகளில் அங்கிலிக்கன் சபைகளை இன்று பிளவுபடுத்தும் கருத்து வேறுபாடு வேதாகமம் தான் திருச்சைபையின் மாறமுடியாத மையமா? சமூகத்திலுள்ள அலைகள் அல்லது அரசாங்கத்திலிருந்து வரும் சட்ட மாற்றங்களுக்கு திருச்சபையும் அடிபணியவேண்டுமா என்ற கேள்விகளாகும். உதாரணமாக நாடொன்று, அதே பால் கலியாணத்ததை அங்கீகரித்தால் திருச்சபை ஒரேபாலின கலியாணத்தை கவனத்தில் எடாது தன்காரியங்களை நடத்துவதா அல்லது அக்கலியாணத்தை ஆசீர்வதித்து அதற்கு ஒரு ஆராதனையும் நடத்தவேண்டுமா?
மேற்கைய நாடுகளில் புருஷன்-புருஷன் சோடியாக அல்லது பெண்சாதி-பெண்சாதியாக கலியாணம் பண்ணி அதேபால் சோடியான அத்தியட்சர்கள் (பிஷப்மார்) ஆக லம்பத் மகாநாட்டிற்கு வந்திருந்தனர். 1978இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ-10 பிNரைரணை கலியாணம் ஆனது ஒரு புருஷனுக்கும் ஒரு மனுஷிக்கும் அவர்கள் வாழ்நாள் முழுதிற்கும் கடவுளால் உண்டாக்கப்படும் ஒருமை என்கிறது. இது மிகப்பெரும்பான்மையான அங்கிலிக்கன்மாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டும.; இதற்கு முரணாக சில அத்தியட்சர்மாரால் வட அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இடங்களில் கல்யாணங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒற்றுமையை பேணவேண்டும் என்று சொல்லி தண்டனை ஒன்றும் இச்சட்டவிரோத செயல்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஐ-10 பிNரைரணையை மீள் உறுதிப்படுத்தும் பிரேரணையும் சமாதானத்தின் பெயரில் லம்பத்தில் இவ்வருஷம் தடுக்கப்பட்டது.
இதனால் மிகக் கோபமுற்ற அத்தியட்சர்மார் 26.07.2022-08.08.2022 நடைபெற்ற லம்பத் மகாநாட்டிற்கு செல்ல மறுத்தனர். மேலும் பல அத்தியட்சர்மாரும் மகா அத்தியட்சர்மாரும் அதேபால் கலியாணம் செய்தவர்களோடு நற்கருணை ஆராதனையில் பங்குபெறுவது கடவுளுக்கு விரோதம் என்று அப்பத்தையும் ரசத்தையும் பெற பலிபீடத்திற்கு செல்ல மறுத்தனர்.
புதிய கண்ணோட்டம்
ஒரு மாகாணம் ஆக 3 மறைமாவட்டங்களும் அவற்றிற்கு தகுந்த அங்கத்தவர்களும் வேண்டும் என்ற கூற்று மேற்கத்தைய விஸ்வாச இழப்பால் தலைகீழாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக நான் ஒருகாலத்தில் வணங்கிய மிச்சிகன் மாநில அங்கிலிக்கன் சபை வளங்கள் மிக்கதாய் இருந்தது. காலப்போக்கில் வட மிச்சிகன் மறைமாவட்டத்தில் 21 சபைகளும் புஸ்தகத்தில் 908 அங்கத்தவர்கள் இருந்தாலும் ஞாயிறு வழிபாட்டில் 385 பேரே 2019இலும் இதுவும் 2020 இல் 233 ஆக வீழ்ச்சியடைந்தது. இப்படியே முழு அமெரிக்கன் திருச்சபையில் எண்ணிக்கை 17 லடசத்திற்கும் தொழுபவர்கள் 500,000 இற்கும் வீழ்ச்சி கண்டும் 112 மறைமாவட்டங்கள் தொடர்ந்தும் 112 பிரதிநிதிகளை லம்பத் மகா நாட்டிற்கு அனுப்புகின்றனர்.
இதேபோலவே கனடாவும் 32 மறைமாவட்ட அத்தியட்சர்களை வைத்துள்ளது. இவற்றில் 10 மறைமாவட்டங்களில் ஞாயிறு வழிபாட்டில் 1000 இற்கு குறைந்தவர்களையே ஆலயத்தில் காணலாம். ஆனால் கொழும்பில் மட்டும் ஒரு ஞாயிறு வழிபாட்டில் 1000 த்;துக்கும் மேலதிக எண்ணிக்கை இருந்தும் எமக்கு லம்பத்மாநாட்டில் அவதானி அந்தஸ்தே உள்ளது. இது அங்கிலிக்கன் ஜனநாயகம் வழிதவறியதை காட்டுகிறது.
இலங்கை திருச்சபை
மக்களை இழந்தபோதும் பழைய எண்ணிக்ககையின் அடிப்படையில் மாகாண நிலையும் லம்பத் பிரதிநிதித்துவம் மேற்கைய நாடுகள் பெற்றமையாலும் மற்றும் மகா அத்தியட்சர் பட்ட ஆசை யாலும் ஏன் இலங்கையருக்கு லம்பத்தில் பங்கில்லை என்ற கேள்வி எழும்புகிறது. ஆங்கிலிக்கன் இலங்கை திருச்சபை ஒரு சாதாரண திருச்சபையே அன்றி ஒரு அங்கிலிக்கன் மாகாணம் அல்ல. மாகாணம் ஆவதற்கு குறைந்தது 3 மறைமாவட்டங்கள் இருக்கவேண்டும் ஆனால் கொழும்பு, குருநாகலை என்று இரண்டே இரண்டுதான் உள்ளன –இவற்றை 3 ஆக்குவது எப்படி?
பிரித்து வருவதின் வருமானம் செலவைவிட கூடுதலாக இருக்குமா? குருநாகலை மறைமாவட்டத்தின் வருமானம் ஏற்கனவே குறைவாய் உள்ளது. பல செலவுகளுக்கு கொழும்பு மறைமாவட்டத்தால் பணம் கொடுக்கப்படுகின்றது. ஆகவே கொழும்பு மறைமாவட்டத்தை பிரித்தே இரு புதிய மறைமாவட்டங்களை உருவாக்கலாம். கொழும்பு மறைமாவட்டம் 4 குருஸ்தலங்களாக (ஆச்டீக்கன்ரி) பிரிக்கப்பட்டுள்ளது – யாழ்ப்பாணம், நுவரஎலியா, காலி, கொழும்பு. யுத்தத்தின் பின்பும், பல தமிழர் நாட்டைவிட்டு ஓடியதாலும் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு கொடுப்பனவுகள் வீழ்ச்சிகண்டு இவற்றிலிருந்து திருச்சபையின் வருமானம் ஒரு மறைமாவட்டத்ததை நடத்த போதாது. வறுமையின் காரணத்தால் அப்படியே நுவரெலியாவுமுண்டு;. ஆனால் காலப்போக்கில் இந்த நிலை மாறலாம் என திருச்சபையால் கணிக்கப்படுகிறது. பலமக்களையுடைய சபைகள் இன்று மக்கள் இல்லாத நிலையிலுள்ளதால் ஒரு சபையை பேணவேண்டிய மிகப்பெரிய செலவான குருவின் சம்பளம் ஒரு பாரமாக அமைகிறது. கொழுப்பிலுள்ள ஒரு குரு, யாழ்ப்பாண குரு பராமரிக்கும் இரண்டுமடங்கு மக்களை பார்த்துக்கொள்கிறார்:
ஆகவே கொழும்பு காலி குருஸ்தலங்களை பிரித்தே நிதி சுயாதீனமான இரு மறைமாவட்டங்களை உருவாக்குவது சாத்தியமாகும். இவ்வழி போகின் யாழ்ப்பாணம்-நுவரெலியா-கொழும்பு ஒரு புதிய மறைமாவட்டமாகும். அதேபோலவே காலி-மொரட்டுவை-தெகிவளை மற்ற மறைமாவட்டமாகும்.
உள்ள 2 மறைமாவட்டங்களை பிரித்து மூன்றாக்குவதா இல்லையா என்ற தீர்மாணம் 27-29.10.2022 கொழும்பில் நடைபெறவிருக்கும் வருடாந்த மன்ற ஒன்றுகூடலின்போது எடுக்கப்படும்.
அடிப்படை விஷயங்களை அறிவுறுத்தவும், அவற்றை ஆலோசிக்கவும் கேள்விகளை எழுப்பவும் பல கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 08.09.2022 அன்று மாலை, சூம் வழியாக தமிழில் பி.ப 5.30-7:00 ஒரு கலந்துரையாடல் நடத்தப்படும். ஏற்கனவே 27.08.2022 அன்று ஆங்கிலத்தில் ஒரு உரையாடல் நடத்தப்பட்டது. வரவழைப்பானது, வெளியேறும் சபைகளின் பிரதிநிதிகளுக்கே அனுப்ப்பட்டதே ஓழிய, தீர்மானத்தைபற்றி வாக்களிக்கப்போகும் புதிய பிரதிநிதிகளுக்கு அனுப்ப்படவில்லை. இதை சுட்டிக்காட்டிய பின்பும் தமிழ் கலந்துரையாடலிற்கும் வெளியேறும் பிரதிநிதிகளுக்கே வரவழைப்பும் சூம் இலக்க விபரங்களும் அனுப்பப்பட்டுள்ளன.
நேரத்தை காக்கும் நோக்கில் மக்கள் மத்தியில் எழும் கேள்விகளும் கரிசனைகளும் இங்கே முன்னெழுப்பப்படுகின்றன. இவையாவன:
1. எம்மை ஒரு மாகாணமாக்க பல கஷ்டங்கள் செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நன்றி. ஆனால் உண்மையான அங்லிக்கன் வழிபாட்டிற்கு மாகாணமாய் இருப்பது அவசரம் இல்லை. ஆனால் ஜெபப்புஸ்தகமின்றி வழிபாடில்லை. ஜெபப்புஸ்தகமின்றி காலை, மாலை ஜெபங்களை எம்பாட்டில் வீடுகளில் கும்பிட முடியாது. யுஇ டீஇ ஊ வருஷ வேதவாசிப்பு குறிப்புகளின்றி ஆராதணைகளுக்கு தயார் பண்ணவும் முடியாது, 3 வருடங்களில் சத்திய வேதத்ததை இணைந்த பகுதிகளுடன் வாசித்து ஆழமாக படிக்கவும் முடியாது. ஜெபப்புஸ்தகமின்றி குருவே தன் பகுதியையும் மக்கள் பகுதியையும் வாசித்து ஆராதனைகளை கொச்சப்படுத்தும் நிலை ஏற்பட்டள்ளது.
மாகாணமாய் இருந்ததால்தான் எமது ஜெபப்புஸ்தகம் எழுத அதிகாரம் உண்டெனப்பட்டது. இது முற்றும் பிழை. ஏன்? (அ) எமது யாப்பிலேயே 1662 ஆண்டு ஜெபப்புஸ்தகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய புஸ்தகசாலைகளி;ல் வாங்கலாம். தென் இந்திய திருச்சபையால் உபயோகப்படுத்தப் படுகிறது. ஆங்கில புஸ்தமும் வாங்கலாம். சிங்களப்புஸ்தகமும் முடியலாம். ஆவற்றைப் பெற்று உபயோகிக்க சோம்பல் பட்டுள்ளோம். (ஆ) அதிகாரமில்லையென்றால், எமது திருவிருந்து ஆராதனைளை எந்த அதிகாரத்துடன் எழுதினோம்?
2. ஒரு மாகாணமாய் இருந்தால் கூடிய சேவை செய்யப்படலாம் எனப்படுகிறது. இப்போது செய்யமுடியாததில் எதை மாகாணமாக செய்ய முடியும்?
3. லம்பத்தில் பல பிளவுகள் உள்ளன. பரிசுத்த வேதாகமத்தின் கலியாணம் பற்றிய கருத்துகள் இலங்கையில் ஏற்படுத்தப் போகிறோமா? லம்பத் சென்று ஏன் லம்பத் பிரச்சினைகளை இங்கு புகுத்துவான்?
4. எனக்கு ஒரு பெண் குருவை மணந்த பெண் குரு சபைக்கு குருவாக அமெரிக்காவில் அனுப்ப்பட்டதால், சபையின்றி தத்தளி;த்தேன். அது எமக்கும் வேண்டுமா?
5. கணிப்புகளின் படி கொழும்பு-யாழ்ப்பாணம்-நுவரேலியா ஒரு மறைமாவட்டமாகவும் காலி-மொரட்டுவை மற்றையதாகவும் அமைவதே ஒரேயொரு நிதிச்சுதந்திரமான இரு மறைமாவட்டங்களை உருவாக்கும் வழி. இதனால் ஒன்றில் ஒரு மாவட்டம் தமிழ் பெரு;பான்மையுடையதாகும். மற்றது சாதிரீதியான மாவட்டமாகும். இது நல்லதா?
6. பிஷப் கெனத் பெனான்டோ 133ம் மறைமாவட்ட கூட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருப்போரை தென்னிந்திய திருச்சபைக் பற்றிச் சொன்னது கூட்ட அறிக்கையில் உள்ளது. யாழ் தென்னிந்திய திருச்சபை பெரிய பணக்கஷ்டத்தில் உள்ளது. யாழ் குருமுதல்வர் ஸ்தலத்தில் 8 குருமாருக்கு1092 சபை மக்கள். கொழும்பில் 43 குருமாருக்கு 11701 மக்கள். யாழ் குருமுதல்வர் ஸ்தலம் மிக விலையானது. ஒரு கொம்பனி நஷ்டத்தில் ஓடும் பகுதிகலை மூடுவது போலவா இந்த ஆலோசனை?
7. கூட்டத்தில் காட்டப்பட்ட படத்தில் எமது அத்தியடசர் துஷாந்த ரொட்ரிகோவை லம்பத் உயரத்தியட்சர் தாம் நியமிக்க முன்பு மூன்;றாவது மறைமாவட்டத்தை உண்டுபண்ணுவாரா எனறு கேட்டபோது எம் பிஷப் இணக்கம் தெரிவித்தார் என்றார். எமது மறைமாவட்ட சபையை கேட்காமல் இணங்கியது ஜனநாயக முறைக்கும் எமது யாப்பிற்கும் அமையுமா?
8. மறைமாவட்டத்ததை உண்டாக்கலில் வழி நடத்தும் குழு, கொழும்பு மறைமாவட்ட குழுவால் ஸ்தாபிக்கப்பட்டது எனப்படுகிறது. ஆனால் இவர்கள் நிலையியல்;குழு கூட்டங்களுக்கு பின்பு வெளிப்படைதன்மையின்றி நியமிக்கப்பட்டவர்கள் என்ற கருத்தும் உள்ளது. காரியதரசி, பதிப்பாளர் நிலையியல்;குழுவின் சம்மதத்தோடு நியமிக்கப்பவேண்டும் என்கிறது யாப்பு. ஆனால் சம்மதம் கேட்கப்படுவதில்லை. யாழ்ப்பாணத்திற்கு அறிவூட்ட அனுப்பிய இரு தமிழ் பெண்களும் கிளிநொச்சி கூட்டமொன்றில் ஆங்கிலத்திலேயே பேசி மொழி பெயர்ப்பு கேட்டனர். வழி நடத்தும் குழுவில் தமிழில் இயங்கக்கூடியவர்கள் உள்ளார்களா?