யாழ்.அச்சுவேலி பகுதியில் வீட்டினுள் வாள்களை வைத்திருந்த 24 வயதான நபர் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 கூரிய வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.