பேரணியைத் தடுத்து நிறுத்தி எம்மீது எத்தகைய அடக்குமுறையை கையாண்டாலும் பொலிகண்டி வரை நிச்சயம் செல்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் சூளுரைத்தார்.
கொட்டும் மழையிலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் 03/02/2021 அன்று பொத்துவிலில் ஆரம்பமாகியது.
இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள்இ வடக்கு கிழக்கின் நில அபகரிப்புக்கள்இ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அத்தோடு அனைத்து விதமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்க்கும் முகமாகவும் அகிம்சை முறையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
எனவே அனைத்து தமிழ் உறவுகளையும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அவர் கோரினார்.
தொலைபேசி : +94 771181590
விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590
மின்னஞ்சல் : [email protected]