சீனி, தகரப்பேணியில் அடைக்கப்பட்ட மீன், பெரிய வெங்காயம் மற்றும் பருப்பு என்பவற்றிற்கான உச்ச வரம்பு விலை அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.