அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங் நாட்டை வந்தடைந்துள்ளார். டுபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 652 என்ற விமானத்தில் அவர் நாட்டை வந்தடைந்தார்.
அவர் இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது விடுத்த அழைப்பிற்கு அமைய அவரது இந்த விஜயம் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங்கை நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இதேவேளை, அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.