அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றுள்ளார்.
ஜோ பைடன் தனது மனைவியுடன் கப்பிட்டல் ஹில்லை வந்தடைந்தார். இதன்போது, வாஷிங்டன் DC கட்டடத் தொகுதியில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. சுமார் 25 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
கொரோனா காரணமாக பார்வையாளர்களின் செறிவு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அவரது மனைவி மிச்சல் ஒபாமாவும் பதவியேற்பு வைபவத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதேவேளை, அமெரிக்காவின் முதல் பெண், ஆசிய வம்சாவளி, ஆப்பிரிக்க வம்சாவளி துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ். கமலா ஹாரிசுக்கு முதல் லத்தீன் உச்ச நீதிமன்ற நீதிபதியான சோனியா சோடோமாயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.