அமெரிக்காவில் புதுமையான கொரோனா வைரஸ் மூலத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை மேற்கொள்ள அமெரிக்கா உலக சுகாதார அமைப்பு நிபுணர்களை அழைக்கும் என்று சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன் ஒரு நேர்காணலில், உலக சுகாதார அமைப்பின் நிபுணர்களுக்கான சீனாவின் ஏற்பாடுகள் வெளிப்படையானவை அல்ல என்று கூறியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொற்றுநோய் பரவல் ஏற்பட்டதிலிருந்து, சீனா எப்போதுமே திறந்த மற்றும் வெளிப்படையான முறையில் மூலத்தைக் கண்டுபிடிப்பதில் உலக சுகாதார ஸ்தாபனத்துடன் நெருக்கமான தகவல்தொடர்பு மற்றும் ஒத்துழைப்பைப் பேணி வருகிறது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்களின் சீன வருகை என்பது உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சி ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். அத்துடன் கொரோனா வைரஸின் மூல தடமறிதலை மையப்படுத்தியதுமாகும். இந்த நோக்கத்திற்கு சீன அரசாங்கம் வலுவான ஆதரவையும் உதவிகளையும் வழங்கியுள்ளது.
சீன வல்லுநர்கள் தங்கள் தோழர்களுடன் பெரிய அளவிலான தகவல் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளை பகிர்ந்துள்ளனர் மற்றும் பொதுவான அக்கறை கொண்ட விஞ்ஞான பிரச்சினைகள் குறித்து பல சுற்று ஆழமான பரிமாற்றங்களை நடத்தியுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனத்தின் மற்றும் சர்வதேச வல்லுநர்கள் இது குறித்து சாதகமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
வைரஸ் மூலத்தைக் கண்டறிதல் என்பது பல நாடுகளையும் இடங்களையும் உள்ளடக்கிய ஒரு சிக்கலான அறிவியல் பிரச்சினையாகும். பல தடயங்கள், அறிக்கைகள் மற்றும் ஆய்வுகள் 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியின்; ஆரம்பத்தில் உலகின் பல பகுதிகளிலும் கொரோனா தொற்றுநோய் பரவலடைந்ததாக சுட்டிக்காட்டுகின்றன.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் அளித்த அறிக்கையின் உதாரணத்தை மேற்கோள் காட்டிய அவர், அது அமெரிக்காவில் டிசம்பர் 2019 இல் சேகரிக்கப்பட்ட வழக்கமான இரத்த மாதிரிகளில் கொரோனா வைரஸுக்கான எதிர்ப்பு நிலைமைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுகிறது.
இதன் பொருள் என்னவென்றால் ஜனவரி 21, 2020 அன்று நாட்டின் முதல் உத்தியோகபூர்வ கொரோனா தொற்றை விட, அந்த நேரத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருக்கலாம் என்பதாகும்.
சீனா போன்று அமெரிக்க தரப்பு ஒரு நேர்மறையான, விஞ்ஞான மற்றும் கூட்டுறவு அணுகுமுறையை கடைப்பிடித்து, வைரஸ் மூலத்தைக் கண்டுபிடிக்கும் பிரச்சினையில் வெளிப்படைத்தன்மையைப் பேணும் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் அமெரிக்காவில் மூலத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை மேற்கொள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்களை அழைக்கவும். சர்வதேச தொற்றுநோய்க்கு எதிரான ஒத்துழைப்பு மற்றும் விஞ்ஞான மூல கண்டுபிடிப்புக்கு சாதகமான பங்களிப்புகளைச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.