ஐக்கிய மனித உரிமைபேரவையில் எமது ஆலோசனைகளையும் ஆதரிக்கும்படி தெரிவித்து வவுனியாவில் கடந்த 1445 ஆவது நாளாக தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அமெரிக்க இராஜங்க செயலாளர் அந்தோனி பிளிங்கினுக்கு (Anthony Blingin) கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தனர்.
அதில் இலங்கையின் போர்க்குற்றம், தமிழ் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான சர்வதேச குற்றவியல் விசாரணைகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது விசேட தீர்ப்பாயத்தின் தேவை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிங்களவர்களின் எதிர்கால ஆக்கிரமிப்பு, தாக்குதலில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க, எங்களுக்கு அரசியல் தீர்வை நிர்ணயிப்பதற்கான வாக்கெடுப்பின் அவசியம் தொடர்பிலும், அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் சிரியா அல்லது மியான்மர் பாணியிலான விசாரணைபொறி முறைகளை வலியுறுத்தியுள்ளதோடு, தாயகத்தில் கொடூரமான இராணுவத்தை அகற்ற ஐ.நா அமைதிகாக்கும் படையை அனுப்புதல் இவை நிறைவடையும் வரை வரை ஓய்வெடுக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம் என்பது அக்கடிதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கினுக்கு நாங்கள் ஒரு கடிதம் எழுதியுள்ளோம் அதில் 8 ஆண்டுகளாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தமிழர்களை ஆதரித்தமைக்கு அவரது அமெரிக்கா நாட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
மனித உரிமைகள் பேரவையில் 47 உறுப்பு நாடுகள் மாத்தி்ரமே இருக்கிறது.இவர்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கையாளுவது சுலபம், 193 உறுப்பினர்கள் இருக்கும் ஐ.நா. பொதுச் சபையை கையாளுவதுதான் மிகவும் கடினமானது. ஒபாமா பரிந்துரைத்தபடி, தமிழர்கள் ஐ.நா.வை நம்பக்கூடாது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐ.நா. தமிழர்களைத் தவறிவிட்டால், எங்கள் இலக்குகளை அடைய மாற்று வழி இருக்க வேண்டும்.நாங்கள் எதிர்கொள்ளும் எங்கள் பிரச்சினையை தீர்க்க இலங்கையில் அமெரிக்க தலையீட்டை தமிழர்கள் அழைக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம் என்று குறிப்பிட்டனர்.