அமெரிக்காவில் இன்று ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று வருகின்றது. பலத்த பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்தத் தேர்தல் இடம்பெறுகின்றது. அமெரிக்காவில் இரு பெரும் கட்சிகளாக குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் உள்ளன. குடியரசுக் கட்சியின் சார்பாக தற்போதைய ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சியின் சார்பாக பிடெனும் களமிறங்கியுள்ளனர். பிடென் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் துணை அதிபராகக் கடமையாற்றியவர். இதனால் அவருக்கு ஆதரவாக ஒபாமாவும் இம்முறை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அமெரிக்காவில் தேர்தல் தினத்துக்கு முன்பே வாக்களிக்கும் ஏற்பாடு உள்ளது. கொரோனாத் தொற்றுக் காரணமாக பாதுகாப்பு முன்னேற்பாடுகளுக்காக இம்முறை அவ்வாறு முன்னரேயே வாக்களிப்பதில் பலர் ஆர்வம் காட்டினார்கள். சுமார் 9 கோடி மக்கள் இவ்வாறு முன்னரேயே தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்