எதிர்காலத்தில் உள்ளூர் அல்லது சர்வதேச போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டேன் என சகலதுறை வீரர் ஷெஹான் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டுக்கு கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளார்.
அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறவுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அதன்படி, அவர் இனி இலங்கை கிரிக்கெட் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்.
ஷெஹன் ஒரு முன்னாள் பிரபல நடிகையின் மகளை திருமணம் செய்து அமெரிக்க குடிமகனாகிறார். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இதுவரை அறிவிக்காததால், அவர் எதிர்காலத்தில் அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாடக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.