வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்று காலை 10.00 மணிக்கு பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்கட்சியின் 44 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையிலாப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.
இன்றும், நாளையும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதன்போது சுயாதீனமாகக் கருத்துத் தெரிவிக்க அனுமதிக்கப்படுவார்கள் என ஆளும் கட்சி முக்கியஸ்த்தர் ஒருவர் தெரிவித்தார்.
விவாதம் முடிவடைந்த பின்னர் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால் வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.