அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுவரும் இராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் சுமார் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இராமர் கோவில் பல்வேறு தடைகளையும் தாண்டி தற்போது கட்டப்பட்டு வருகிறது. கோவில் கட்டுமானப் பணிகளுக்கு 1100 கோடி ரூபாவுக்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படிவதாக ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா நியாஸ் அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் கூறுகிறார்.
“பிரதான கோயிலின் கட்டுமானம் மூன்றரை ஆண்டுகளில் நிறைவடையும், இதற்கு 300-400 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 70 ஏக்கர் நிலத்தை அபிவிருத்தி செய்ய 1,100 கோடி ரூபாவுக்கு மேல் செலவாகும்” என்று அவர் தெரிவித்தார்.