பாரபட்சத்தின் காரணமாக சடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தை நிறுத்த பிரதமரும் அரசாங்கமும் பின்வாங்குவது கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பொதுமக்களும் அண்மையில் உயிரிழந்தவர்களும் தமது உரிமைகளை ஜனநாயக அரசு ஒன்றிடம் இருந்து கௌரவமாக பெற்றுக்கொள்ள உரித்துடையவர்கள் என அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.