-க.கமலநாதன்-
சிறுவர் பாதுகாப்பு விடயங்களை உடல், உள, பாலியல், புறக்கணிப்பு என்ற நான்கு பரப்புக்களின் கீழ் பார்க்கப்படுகின்றதுடன், இவ்வாறான விடயப்பரப்புகளின் கீழ் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கின்ற முறைபாடுகளில் பெரும்பாலானவைக்கு உரிய வகையில் தீர்வுகள் கிடைப்பதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் மாவட்ட ரீதியில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசியமான ஆளணியொன்று இல்லாமல் இருக்கின்ற சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை 25 மாவட்டங்களிலும் 325 சிறுவர் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக அதிகாரிகளை மாத்திரமே கொண்டுள்ளது.
அத்தோடு, சிறுவர் துஷ்பிரயோகச் செயற்பாடுகளை 25 வகைகளாக பிரித்துள்ளதோடு, அதன் கீழ் அந்த அதிகாரசபைக்கு 45,809 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளனவென அதிகார சபை கணக்காய்வுத் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது.
அட்டவனை 04
ஆண்டு | முறைபாடுகளின் எண்ணிக்கை | பூர்த்தி செய்யப்பட்வை | தீர்வு காணப்படாதவை |
சதவீதம் |
2011 | 6016 | 2875 | 3249 | 46 |
2012 | 8504 | 5692 | 2812 | 66 |
2013 | 11849 | 5985 | 5504 | 52 |
2014 | 11100 | 5317 | 5783 | 47 |
2015 | 11212 | 5450 | 5762 | 48 |
2016 | 9>535 | 4489 | 5046 | 47 |
2017 | 9202 | 3>764 | 5438 | 40 |
2018 | 9266 | 1940 | 7326 | 20 |
2019 | 2845 | 1692 | 1153 | 59 |
மொத்தம் | 79259 | 37168 | 42>073 | 53 |
அதிகளவில் துஷ்பிரயோகங்கள் இடம்பெறும் மாவட்டங்கள்
மாவட்டம் | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 |
கொழும்பு | 1037 | 1174 | 1477 | 1403 | 1522 | 1271 | 1302 | 1330 |
கம்பஹா | 979 | 948 | 1146 | 1169 | 1187 | 917 | 974 | 1066 |
குருணாகல் | 442 | 636 | 785 | 756 | 827 | 558 | 681 | 823 |
காலி | 435 | 618 | 853 | 682 | 700 | 635 | 586 | 617 |
மேலும், இந்த அதிகாரசைபயின் சிரேஷ்ட நிலைக்கான ஆறு வெற்றிடங்களும், மூன்றாம் நிலைக்கான 4 வெற்றிடங்களும், 2ஆம் நிலைக்கான 145 வெற்றிடங்களும், ஆரம்ப நிலைக்கான 4 வெற்றிடங்களுமென மொத்தமாக 159 பதவிநிலைகள் வெற்றிடங்களாகவே காணப்படுகின்றனவென கணக்காய்வு அறிக்கைய குறிப்பிடுகிறது.
அதேபோல் களச் செயற்பாடுகளுக்கு அவசியமான ஊழியர்களின் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டளவில் 82, 2016 இல 114, 2017 இல் 129, 2019 இறுதிப்பகுதியில் மீண்டும் 114 வெற்றிடங்கள் ஏற்பட்டிருந்தனவென்றும் கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த அட்டவணைகளின் பிரகாரம் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் சிறுவர் துஷ்பிரயோகச் செயற்பாடுள் கனிசமாக அதிகரித்து வருவமாகவும், 2019 ஆம் ஆண்டில் சிறுவர் பாதுகாப்புக்கான தேசிய கொள்கை இருந்து அதனை முறையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அதிகாரசபை அவதானம் செலுத்தவில்லை எனவும் கணக்காய்வுக் குழு தெவிரித்துள்ளது.
குறிப்பாக அதிகார சபைக்கு கிடைத்த 55 சதவீதமான முறைபாடுகள் தொடர்பாக இன்று வரையில் வழக்கு தொடரப்படாமல் இருப்பதுடன், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கான திட்டத்தின் கீழ் 29,058,645 ரூபாய்களை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை செலவிட்டுள்ள போதும், மேற்படிச் திட்டத்துக்கான குழு செயற்பட்டு வந்த காலத்தில் 6,076 இலிருந்து 9512 ஆக சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்திருந்தமை இவ்வருடத்துக்கான கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
அத்தோடு, மேற்படி குழு 95 ஆயிரம் மாணவர்கள் நலனுக்கா 27,152,379 ரூபாயை செலவிட்டுள்ளதுடன், 2017 – 2019 வரையான காலப்பகுதியில் சுமார் 17 மில்லியன் ரூபாய்களை அதிகார சபை செலவிட்டுள்ளதாகவும் கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
ஆனால் கொழும்பு, கம்பஹா,குருணாகல், காலி உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் அதிகமாக பதிவாயிருந்த போதும் அவற்றை மட்டுப்படுத்துவது தொடர்பாக அவதானம் செலுத்தவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
அதனால் கடந்த ஏழு வருடங்களில் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள்,தண்டிப்புக்கள்,துன்புறுத்தல்கள் என்பன பெருமளவில் அதிகரித்து காணப்படுகின்ற போதும்; அதற்குரிய நடவடிக்கைகளை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொள்ளமால் இருந்து வருகிறது எனவும் கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக இந்த அதிகார சபைக்கு உயர்பதவிகள் பல வெற்றிடங்களாக காணப்படுகின்றமையால் அதனுடைய நிதி நிர்வாகம் நளிவடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன என்றும், அதனால் சிறுவர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளில் அதிகார சபை தோல்வி கண்டுள்ளதென கணக்காய்வு திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.
அதேபோல் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறையான தரவுக் கட்டமைப்பொன்றை அதிகார சபை பேணவில்லை என்பதுடன், 1.2 மில்லியன் ரூபாய் செலவில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பயிலும் துறைசார் மாணவர்களின் உதவியுடன் பெறப்பட்ட தரவுக் கட்டமைப்பும் தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக மட்டுமே பெறப்பட்டுள்ளனவென கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளை திருத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கணக்காய்வு குழு அரசாங்கத்தை அறிவுருத்தியும் உள்ளது. இவ்வாறிருக்க இந்த அதிகார சபையின் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் எதற்காக தயக்கம் காட்டி வருகின்றது என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.
நாட்டில் ஒருபுறத்தில் பட்டதாரிகளுக்கு வேலையில்லா திண்டாட்டம் தலையெடுத்திருக்கும் போது இவ்வாறான பதவியணிகளை வெற்றிடமாக வைத்துக்கொண்டு அவர்களை திண்டாட இடமளித்துவிட்டு அரசாங்கம் வேடிக்கை பார்ப்பதால் எவ்வகையான முன்னைய அரசாங்கங்கள் அடைந்த அற்ப ஆனந்தத்தை போலவே தற்போதைய அரசாங்கமும் இருந்துவிடுமா என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.