கொரோனா தொற்று நிலையில் மக்கள் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அரசாங்கம் மிகவும் நெருக்கடியான நிலையில் இருப்பதாக தெரிவித்து வருகிறது. எனவே ஒருவர் மீது குற்றஞ்சாட்டுவதை விடுத்து, உடனடியாக அரசாங்கம் பதவி விலகி தேர்தலொன்றை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
யார் நாட்டில் ஆட்சிபுரிய வேண்டுமென்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடு தற்போது மிகவும் நெருக்கடியான நிலையில் இருப்பதாகவும், எவ்வாறாயினும் நாட்டை வழிநடத்த எதிர்க்கட்சியாகிய நாங்கள் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற, திறமையற்ற மற்றும் முறையான கொள்கை இல்லாமையே நாடு நாளுக்கு நாள் பாதாளத்தை நோக்கி செல்வதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த அரசாங்கத்திற்கு நாட்டை மீட்டெடுப்பதற்கான திறன் இல்லையெனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.