அலரி மாளிகையில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டார்.
முன்னதாக 12/10 அன்று காலை இலங்கை வந்த சுப்பிரமணியன் சுவாமியை இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.
இந்நிலையில், (12/10) அன்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் அவர் கலந்துகொண்டார்.
இதேவேளை, இலங்கை இராணுவத்தின் 72ஆவது நிறைவையயாட்டி நடத்தப்படும் இராணுவக் கருத்தரங்கிலும் அவர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.