அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயில் 30 இக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. மேற்கு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்கு அருகில் பாரிய காட்டுத் தீ நேற்று ஏற்பட்டுள்ளது.
இத்தீயினால் சுமார் 7 ஆயிரம் ஹெக்டேயர் காட்டுப்பகுதிகள் எரிந்துள்ளன என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். வேகமாக பரவுதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இத்தீயின் புகை 30 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள பேர்த் நகர மத்தியிலும் பரவியிருந்தது. இத்தீயினால் ஏற்பட்ட சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன.
அதேவேளை, உள்ளூர் மேயர் கெவின் பெய்லி, ஏபிசி அலைவரிசையிடம் கூறுகையில், 30 வீடுகள் சேதமடைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
படங்கள் – AFP