சீனா நடைமுறையில் பின்பற்றும் ‘ஒரு மண்டலம் – ஒரு பாதை’ கொள்கை எமக்கு புதிதல்ல. ஆசியாவின் முன்னேற்றத்திற்கு சீனாவின் முன்னேற்றம் அவசியமானதாகும். உலகில் பழமைவாய்ந்த அரசியல் கட்சியாக எழுச்சிப் பெற்றுள்ள சீன கம்யூசின கட்சியின் 100 ஆவது வருட நிறைவையொட்டி சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவை உறுதிப்படுத்தும் வகையில் நாணய குற்றி வெளியிட்டுள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கிடம் தெரிவித்தார்..
பிரதமர் மேலும் குறிப்பிட்டதாவது, சீன கம்யூனிச கட்சியின் நூற்றாண்டு வருட நிறைவை முன்னிட்டு இலங்கை மக்கள் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லுறவு காணப்படுகிறது. சீன கம்யூனி கட்சியின் 100 ஆவது வருட நிறைவையொட்டி சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர நல்லுறவை உறுதிப்படுத்தும் வகையில் நாணய குற்றி வெளியிடப்பட்டுள்ளது.
சீன கம்யூனிச கட்சி சீனாவை சிவப்பு சீனாவாக மாற்றி 72 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவு 1957 ஆம் ஆண்டு ஆரம்பமானது. சீனாவை சுயாதீன இராச்சியமாக மாற்றியமைத்த சீன கம்யூனிச கட்சியுடன் இலங்கையின் இடதுசாரி கட்சிகள் ஆரம்பத்தில் இருந்து தொடர் கொண்டுள்ளன.
சீன கம்யூனிச கட்சி தான் உலகில் உள்ள பலம் வாய்ந்த அரசியல் கட்சியாக காணப்படுகிறது. இக்கட்சி 70 வருட காலத்திற்குள் முழு உலகிற்கும் அரசியல் ரீதியிலான பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது. சீன கம்யூனிய கட்சியே சீனாவை பூகோள மட்டத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளது. சீனா வெளிவிவகார கொள்கையில் உறுதியாக உள்ளது. பிற நாடுகள் மீது சீனா தனது வெளிவிவகார மற்றும் அரசியல் கொள்கையை திணிக்கவில்லை.
ஏனைய நாடுகளின் செயற்பாடுகளில் சீனா தலையிடவில்லை. சீனா தனது நிலையில் இருந்து கொண்டு ஏனைய நாடுகளுக்கு உதவி புரிந்துள்ளது. இது பிற நாடுகளின் சுயாதீனத்தை மதிக்கும் பண்பை வெளிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே சீன சர்வதேச மட்டத்தில் முன்னேற்றமடைந்துள்ளது. சீனாவின் முன்னேற்றம் மிகவும் முக்கியமானது. ஆசியாவை முன்னேற்றுவதற்கு சீனாவின் பங்களிப்பு மற்றும் முன்னேற்றம் அவசிமானதாகும் என்றார்.