பிரிட்டனைச் சேர்ந்த விவசாயியான யுவதியொருவர், தனது ஆடுகளை வீடியோ கோல் மூலம் காண்பித்து பணம் சம்பாதித்து வருகிறார். டொட் மெக்கர்த்தி எனும் 32 வயதான இந்த யுவதி, இங்கிலாந்தின் லன்காஷயர் பிராந்தியத்திலுள்ள ரொஸன்டேல் பகுதியைச் சேர்ந்தவர்.
ஆடுகள் உணவு உட்கொள்வதையும் கத்துவதையும் ‘ஸும்’ அப்ஸ் மூலம் கொன்பரன்ஸ் கோலில் மற்றவர்களுக்கு காண்பிக்கிறார் டொட் மெக்கர்த்தி. இக்காட்சிகளைப் பார்ப்பதற்கு தலா 5 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 1,340 இலங்கை ரூபா) அறவிடுகிறார்.
இத்தகவலை கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும். உண்மையில், பிரிட்டனில் கடந்த ஏப்ரல் மாதம் முதலாவது கொரோனா லொக்டவுண் அமுல்படுத்தப்பட்டிருந்தபோது, வேடிக்கைக்காகவே இணையத்தளத்தில் இது குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டாராம் மெக்கர்தி. அடுத்தநாள் தனக்கு 200 இற்கும் அதிகமான மின்னல்கள் வந்திருந்தன அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலிருந்து மக்கள், டொட் மெக்கர்த்தியின் ஆடுகளுடன் வீடியோ கோலில் தோன்றுவதற்காக பணம் செலுத்துகின்றனர். இதன்மூலம் சுமார் 50,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 1.35 கோடி ரூபா) தான் சம்பாதித்துவிட்டதாக டொட் மெக்கர்த்தி தெரிவித்துள்ளார்.
(AFP Photo)