முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மைதானத்தை துப்பரவு பணி செய்து கொண்டிருந்த போது விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான ஆட்லறி செல்கள் மீட்கப்பட்டுள்ளன.
முள்ளியவளை வித்தியானந்தா தேசிய பாடசாலையின் புதைக்கப்பட்டிருந்த ஆட்லறி செல்களே நேற்று (28.01.2021) கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கனரக வாகனம் கொண்டு தோண்டப்பட்ட போது வெடிக்காத நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட செல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நன்றி – தமிழ் பக்கம்