பிரபல திரைப்பட நடிகை கெஹனா வசிஸ்த். தமிழ் மொழியில் கடந்த 2016ஆம் வெளியான பேய்கள் ஜாக்கிரதை என்ற திகில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் கெஹனா வசிஸ்த். ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மலத் பகுதியில் இருக்கும் பங்களா ஒன்றில் ஆபாச வீடியோ ஷூட்டிங் நடத்தப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொலிஸார் நேற்று அந்த பங்களாவில் திடீர் என்று சோதனை நடத்தியுள்ளனர்.
சோதனையில் நடிகையும், மொடலுமான கெஹனா வசிஸ்த் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆபாச வீடியோக்கள் எடுத்து இணையதளத்தில் பதிவு செய்ததால் அவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த கும்பலின் முக்கிய மூளையாக செயல்பட்ட ரோயா கான் என்கிற யாஸ்மினையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாஸ்மின் படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். பொலிவூட் படங்களில் நடிக்க விரும்பும் பெண்களின் பட்டியலை யாஸ்மினிடம் இருந்து பொலிஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். நடிப்பு ஆசையில் மும்பைக்கு வரும் பெண்களை படங்களில் நடிக்க வைப்பதாக ஆபாச படங்களில் நடிக்க வைத்து வந்திருக்கிறார் யாஸ்மின்.
கெஹனாவின் நிஜ பெயர் வந்தனா திவாரி. சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் சிரிமிரியை சேர்ந்தவர். 1988ஆம் ஆண்டு பிறந்த கெஹனாவின் அப்பா ராஜேந்திர திவாரி ஒரு கல்வி அதிகாரியாக இருந்தவர். பாட்டி ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை. சிரிமிரி மற்றும் போபாலில் பள்ளிப் படிப்பை முடித்த கெஹனா பி.இ. படித்தவர்.
விசாரணையில் இதுவரை 87 ஆபாச வீடியோக்களை தயாரித்து பதிவேற்றியது தெரிய வந்துள்ளது. பிரபல நடிகை ஒருவர் ஆபாச படம் தயாரித்த விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாடலிங் செய்வது, நடிப்பதுடன் இல்லாமல் சில காலம் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். ஃபில்மி துனியா என்கிற படம் மூலம் தான் கெஹனா ஹீரோயினாக அறிமுகமானார். தெலுங்கு படங்களிலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.