இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ. சிதம்பரம் அரங்கில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 134 ஓட்டங்களையே பெற்றது.
இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 286 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 2 ஆவது இன்னிங்ஸில் 482 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
போட்டியின் 3 ஆவது நாளான 15.02.2021 அன்று ஆட்டமுடிவின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 53 ஓட்டங்களைப் பெற்றது.
4 ஆவது நாளான 16.02.2021 அன்று 164 ஓட்டங்களுடன் இங்கிலாந்து அணியின் சகல விக்கெட்களும் வீழ்ந்தன. இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் அக்ஸார் பட்டேல் 60 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதே அரங்கில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ஓட்டங்களால் வெற்றியீட்டியிருந்தது. 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தற்போது இரு அணிகளும் 1:1 விகிதத்தில் சமநிலையில் உள்ளன.