இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் காலியில் நடைபெற்ற முதலாவர் டெஸ்ட் போட்டியில் இ“்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட இருதரப்பு மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. அத்துடன் ஐசிசி உலக டெஸ்ட சம்பியன்ஷிப்புக்கான 60 புள்ளிகளையும் இங்கிலாந்து பெற்றுக்கொண்டது.
இப் போட்டியில் 74 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 3 விக்கெட்களை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று 7விக்கெட்களால் வெற்றியீட்டியது.
போட்டியின் நான்காம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 38 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து 3 விக்கெட்களை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஜொனி பெயார்ஸ்டோவ் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் டான் லோரன்ஸ் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.