இலங்கையில் ஏற்பட்டுள்ள சீனாவின் ஆதிக்கத்தால், இந்தியா- அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இலங்கைப் பிராந்தியத்தில் அமைதியின்மை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழில் 17.02.2021 அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர், குடா நாட்டில் சீனாவின் ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு எதிராக இலங்கை தொடர்ந்தும் செயற்பட்டால் நிச்சமாக இங்கேயொரு பாரிய மோதல் வெடிக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
ஒருவேளை அமெரிக்கப் படைகளோ, இந்தியப் படைகளோ வடக்கு, கிழக்கில் இறங்கி நிலைகொள்ளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி -ஆதவன்