72 ஆவது இந்திய குடியரசு தினத்தை இந்திய உயர் ஸ்தானிகராலயம் 2021 ஜனவரி 26 ஆம் திகதி அன்று இந்திய உயர் ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் கொண்டாடியது. உலகில் எழுதப்பட்ட மிகப்பெரிய அரசியலமைப்பான இந்திய அரசியலமைப்பு 1950 ஜனவரி 26 ஆம் திகதி அன்று அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
அதற்கு மேலதிகமாக பாரத மாதாவுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் நெறியாள்கை செய்யப்பட்ட கதக் மற்றும் ராஜஸ்தானி பாணியிலான நாட்டுப்புற ஆற்றுகைகளும் இங்கு இடம் பெற்றிருந்தன. மேலும் இலங்கையில் வசித்து வரும் இந்தியர்களின் குழந்தைகள் பங்கேற்றிருந்த பல்வேறு நிகழ்வுகளும் மெய்நிகர் வடிவங்களாக இங்கு காண்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் இந்திய இலங்கை நட்புறவுக்கான புதிய சின்னம் ஒன்றும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இந்த சின்னமானது இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் தேசிய அளவில் நடத்தப்பட்ட போட்டியின் மூலமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. இலங்கை -இந்தியா ஆகிய இருநாடுகளிடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமையை இந்த புதிய சின்னமானது வலுவாக்கும் அதேநேரம் உத்தியோகபூர்வ தேவைகளுக்காகவும் உயர் ஸ்தானிகராலயத்தால் பயன்படுத்தப்படவுள்ளது
கொவிட்19 காலத்துக்குரிய வழிமுறைகள் அனைத்தையும் மிகவும் கடுமையாக கடைப்பிடித்தவாறு இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. மட்டுப்படுத்தப்பட்ட இந்த நிகழ்வில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்றிருந்தனர். இதேபோன்ற நிகழ்வுகள் கண்டியில் உள்ள துணை உயர் ஸ்தானிகராலயம் யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் அலுவலகங்களிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.