இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 9 ஆம் திகதி அருணாச்சல பிரதேசத்திற்கு சென்றமைக்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என கூறி வரும் சீனா, இந்திய தலைவர்கள் அங்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கடந்த வார இறுதியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அருணாச்சல பிரதேசம் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. எல்லைப் பிரச்னைகளை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை இந்தியா நிறுத்த வேண்டும் எனவும் சீனா கூறியிருந்தது.
சீனாவின் இந்த எதிர்ப்பை நிராகரிப்பதாக இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. சீனாவின் இதுபோன்ற கருத்துக்களை நிராகரிப்பதாகவும், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்றும், இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.