இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேபோப்பிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தின் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
03/02/2021 அன்று நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், மலையக வீட்டுத் திட்டத்தை துரிதப்படுத்துவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.