மேஷம்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். வருமானம் திருப்தி தரும். தாய்வழி உறவில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். நல்ல தகவல்கள் நண்பர்கள் மூலம் கிடைக்கும்.
ரிஷபம்
தொடர்ந்து வரும் வெற்றிகளால் துணிவு கூடும் நாள். சொத்துகளால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும். நீண்ட நாளைய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.
கடகம்
உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிட்டும் நாள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டுகொள்வீர்கள். உங்களை நம்பி சிலர் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம்.
சிம்மம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். மறதியால் சில பணிகளை மாற்றியமைக்க நேரிடலாம். எடுத்த காரியத்தை செய்துமுடிக்க பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலைஉருவாகும்.
கன்னி
காலை நேரம் கலகலப்பும் மாலைநேரம் சலசலப்பும் உருவாகும் நாள். வருமானம் திருப்திதரும். சந்திரபலம் குறைவதால் எதையும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. அரைகுறையாக பணிகள் நிற்கும்.
துலாம்
நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கிடைக்கும் நாள். புதியவர்களின் சந்திப்பு கிட்டும். எதிர்பார்த்த பணவரவொன்று வந்து சேரும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
விருச்சகம்
முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும் நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.
தனுசு
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். புதிய திட்டமொன்றை செயல்படுத்த முற்படுவீர்கள். வீட்டுக்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
மகரம்
விரோதிகள் விலக விழிப்புணர்ச்சியுடன் செயல்படவே ண்டிய நாள். வீடுமாற்றச் சிந்தனை அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் ஆதரவு இருந்தும் சில காரியங்களைச் செயல்படுத்த இயலாது.
கும்பம்
பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். விலைஉயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் கூடும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பாதியில் நின்றபணிகளை சுறுசுறுப்போடு செய்து முடிப்பீர்கள்.