மேஷம்: அசுவினி: நண்பர்களுடனான சண்டைகள், வாக்குவாதத்தை முடியுங்கள்.
பரணி: தடைப்பட்ட சுப நிகழ்ச்சி நடப்பதற்கான முயற்சிகள் வெல்லும்.
கார்த்திகை 1: செலவு செய்வதற்கு ஏற்ற வருமானத்தைப் பெறுவீர்கள்.
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: சிறுவெற்றி காரணமாக மகிழ்ச்சியான மன நிலை உருவாகும்.
ரோகிணி: பிள்ளைகள் மகிழ்ச்சி தரும்படியான செயல்களை செய்வார்கள்.
மிருகசீரிடம் 1,2: பலகாலத் தயக்கத்துக்குப் பிறகு களத்தில் இறங்குவீர்கள்.
மிதுனம் : மிருகசீரிடம் 3,4: நீங்கள் சொல்லும் வாதங்கள் சரியாக ஏற்கப்படும்.
திருவாதிரை: நல்ல நிகழ்வு நடப்பதால் மகிழ்ச்சியான மனநிலை நிலவும்.
புனர்பூசம் 1,2,3: விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை
கடகம்: புனர்பூசம் 4: தைரியமும், உறுதியும் உங்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டும்.
பூசம்: வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை தேவை. வீண் பகை வேண்டாம்.
ஆயில்யம்: குடும்ப ஒற்றுமையைக் குறைக்கும் எந்தச் செயலும் வேண்டாம்.
சிம்மம்: மகம்: மனதில் இத்தனை நாள் நிலவிய குழப்பம் நீங்கி நிம்மதி நிலவும்.
பூரம்: இத்தனை காலம் இல்லாத தெளிவு உங்களிடம் காணப்படும்.
உத்திரம் 1: குடும்ப இணக்கம் ஏற்பட ஈகோ தடையாக இருக்க வேண்டாம்.
கன்னி: உத்திரம் 2,3,4: அலுவலக செயல்பாடுகள் அனுகூலமாய் அமையும்.
அஸ்தம்: செய்யும் முயற்சிகளில் பரபரப்பும், பதற்றமும் வேண்டாம்.
சித்திரை 1,2: ஒற்றுமை மேலோங்கும். காதல் விஷயங்களில் கவனம் தேவை.
துலாம்: சித்திரை 3,4: சமூகத்தில் உங்கள் செயல்பாடுகள் மதிப்பு ஏற்படுத்தும்.
சுவாதி: பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். குடும்ப வருத்தம் நீங்கும்.
விசாகம் 1,2,3: வேலை விஷயமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்: விசாகம் 4: வழக்குகள் சாதகமாக முடியும். கோபத்தைக் குறைக்க வேண்டும். .
அனுஷம்: மற்றவர்களின் அந்தரங்க விஷயத்தில் தலையிட வேண்டாம்.
கேட்டை: தொழில்நுட்ப உதவியால் நன்மை ஒன்று நிகழும்.
தனுசு: மூலம்: புதிய சிக்கல் ஒன்று வந்து சரியாகும். உடல்நலம் மேம்படும்.
பூராடம்: பெயர் கெடும்படியான விஷயம் எதிலும் ஈடுபட வேண்டாம்.
உத்திராடம் 1: சமீபத்தில் எழுந்த பிரச்னைகளில் இருந்து வெளிவருவீர்கள்.
மகரம்: உத்திராடம் 2,3,4: மற்றவர்களின் பிரச்னையை இன்று தீர்த்து வைப்பீர்கள்.
திருவோணம்: இன்று தேடி வரும் வாய்ப்பை நன்கு பயன்படுத்துங்கள்.
அவிட்டம் 1,2: என்றைக்கோ வாங்கிய சொத்து தற்போது விலை உயர்ந்திருக்கும்.
கும்பம்: அவிட்டம் 3,4: காதல் ஒரு சிலருக்குத் திருமணத்தில் முடிந்து மகிழ்வீர்கள்.
சதயம்: பணியிடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் முற்றிலும் விலகும்.
பூரட்டாதி 1,2,3: தொட்ட விஷயம் துலங்கும். சகோதரர்களின் ஆதரவு உண்டு.
மீனம்: பூரட்டாதி 4: பொறுமையாக செயல்பட்டால் எதிர்கால வெற்றி உறுதியாகும்.
உத்திரட்டாதி: கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். உழைப்பு பலன் தரும்.
ரேவதி: இழுபறியாக இருந்த சில விஷயங்களை முனைந்து முடிப்பீர்கள்.