தமிழ் நாட்டின் பொள்ளாச்சி அருகே உள்ள மாப்பிள்ளை கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ராணி. கணவர் இறந்து விட்டார். பூங்கொடி என்ற மகள் உள்ளார். கணவன் இல்லாமல் வாழ்ந்து வந்த நிலையில், ராணிக்கு தண்டபாணி என்பவருடன் உறவு ஏற்பட்டது.
10 வருடங்களுக்கு முன்பு இந்த உறவு ஏற்பட்டுள்ளது. பூங்கொடி அப்போது சிறுமியாக இருந்தார். இப்போது பூங்கொடிக்கு திருமணமாகி விட்டது. கணவர் பெயர் துரை. மகளுக்கு கல்யாணம் ஆகியும் ராணி தன் தவறான உறவை கைவிடவில்லை. இந்த விஷயம் மருமகன் துரைக்கும் தெரிந்து விட்டது. அதனால், அதிர்ந்துபோன துரை, மாமியாரிடம் இதை பற்றி கேட்டுள்ளார்.
இதுவே வாக்குவாதமாகவும், தகராறாகவும் அடிக்கடி உருவெடுத்தது. இந்நிலையில், தண்டபாணியும் ராணியும் நெருக்கமாக இருந்ததை, மகளும் மருமகனும் நேரிலேயே பார்த்துவிட்டார்கள். இதனால் மறுபடியும் பிரச்சனை வெடித்தது.. துரையும், பூங்கொடியும் கள்ளக் காதலர்கள் இருவரையும் கண்டித்தனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தண்டபாணி, இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதன்போது இருவருமே சுருண்டு விழுந்து அலறினர். அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் இரத்த வெள்ளத்தில் வீழந்து காணப்பட்ட இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே துரை இறந்துவிட்டார்.
பூங்கொடிக்கு கோவை ஆஸ்பத்திரியில் தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது. ஆனால் இப்போது சீரியஸாக இருக்கிறார் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடக்கிபாளையம் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.
தண்டபாணியை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். ராணியிடம் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. மாமியாரின் தகாத உறவை தட்டி கேட்ட மருமகன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.