இனப்படுகொலை நடந்ததை கோட்டாபய பகிங்கமாகவே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அவர் மீது சர்வதேச நாடுகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றில் 19/01/2021இல் நடைபெற்ற அமர்வின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
வடக்கு மாகாணத்திலே உள்ள தமிழ் மக்கள் பொஸ்பரஸ் குண்டுகளாலும், கொத்தணிக் குண்டுகளாலும் கொல்லப்பட்டார்கள். அதுவொரு இனவழிப்பாகும். இதனை நாங்கள் திரும்பத்திரும்ப வலியுத்தியபோது அதனை ஏற்றுக்கொள்வதற்கு யாரும் முன்வரவில்லை.
ஆனால் ஒரு வாரங்களுக்கு முன்னதாக இந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அம்பறை உகண பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றார். அந்த நிகழ்வில் அவர் நான் பிரபாகரனை சுட்டு இழுத்து வந்தேன் என்று கூறியுள்ளார். அவர் அவ்வாறு கூறியதெ பெரும் சாட்சியாகும்.
அடுத்த ஐ.நா.மனித உரிமைகள் பேரவைவின் அடுத்த அமர்வில் இலங்கை விவகாரத்தல் பிரேரணையைக் கொண்டுவரவுள்ள, பிரித்தானியா, கனடா, மொன்ரிநீக்குரோ, வடக்கு மஸ்டானியா உள்ளிட்ட நாடுகளிடத்தில் நான் பகிரங்க கோரிக்கையொன்றை இந்த சபையின் ஊடாக விடுகின்றேன்.
இலங்கையின் ஜனாதிபதி தானே இந்த யுத்தத்தினைச் செய்தேன். தானே கொன்று குவித்தேன் என்று பகிரங்கமாகவே கூறியுள்ள நிலையில் இதற்கு மேல் அவர்கள் மீது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வேறு என்ன விடயம் தேவையாக உள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
இலங்கையில் தமிழர்களும் இணைந்து வாழ முடியாது என்பதற்கு கோட்டாபயவின் கூற்றே சாட்சியம். அது வெளிப்படையான உண்மையுமாகும். ஆகவே சர்வதேச நாடுகள் வடக்கிலும், கிழக்கிலும் மக்களிடத்தில் வெளிப்படையான சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.
இவ்வாறு கொலைகார ஜனாதிபதிக்கு கீழ் தமிழர்கள் எவ்வாறு நிம்மதியாக வாழ முடியும். ஹரீன் பெர்னாண்டோ உண்மைகளை முன்வைத்து பேசுகின்றபோது அவரை கொலை செய்வேன் என்று பகிரங்கமாகவே கூறுகின்றார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பார்த்தே இவ்வாறு கூறுகின்றார் என்றால் வேறு யாரால் பகிரங்கமாக கருத்துக்களை வெளிப்படுத்த முடியும்.
இவ்வாறான கொலை மிரட்டல் விடுக்கும் ஜனாதிபதிக்கு கீழே இந்த நாட்டில் ஜனநாயகம் தளைக்கும் என்று கருதுகின்றீர்களா? நீதி கிடைக்கும் என்றும் நம்புகின்றீர்களா? ஆகவே இந்த நாட்டில் இத்தகைய தலைவருக்கு கீழ் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வதா இல்லையா என்பதை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்த தயாராகவே இருக்கின்றோம்.
இந்த நாட்டு இன்னும் இரத்தம் செய்யும் சூழலுக்குள்ளே சென்று கொண்டிருக்கின்றது. அபாயகரமான நிலையிலேயே இந்த நாட்டு மக்கள் இருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. தமிழர்கள் அடக்கப்படுகின்றார்கள். இந்த விடயங்கள் பரவலாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்றார்.