மேஷம்
உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். வரவு திருப்தி தரும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வீட்டைப் பராமரிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். குழந்தைகள் நலன் கருதி எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.
ரிஷபம்
ஏக்கங்கள் தீர்ந்து இனிய பலன் கிடைக்கும் நாள். உதிரி வருமானங்கள் பெருகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். பகையொன்று நட்பாகலாம்.
மிதுனம்
நிதி நிலை உயர்ந்து நிலைமை சீராகும் நாள். சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறலாம். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள்.
கடகம்
முன்கோபத்தால் முட்டுக்கட்டைகள் ஏற்படும் நாள். வியாபார விரோதங்கள் ஏற்படும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. உறவினர் பகை ஏற்படும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம்.
சிம்மம்
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். சந்தித்த நண்பர்கள் பிரச்சினை தீர வழி வகுப்பர். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகலாம்.
கன்னி
உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். வரவு திருப்தி தரும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வீட்டைப் பராமரிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். குழந்தைகள் நலன் கருதி எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.
துலாம்
பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். இருப்பினும் செலவு நடைகளும் கூடும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
விருச்சகம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வி.ஐ.பிக்களின் சந்திப்பு உண்டு. தொழில் வளர்ச்சி மேலோங்கும். சேமிப்புகளை உயர்த்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும்.
தனுசு
பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். தொழிலில் எதிர்ப்பாக இருந்த கூட்டாளிகள் இனக்கத்துடன் நடந்து கொள்வர். பழைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
மகரம்
உதாசீனப்படுத்தியவர்கள் ஓடி வந்து சேரும் நாள். எந்த முக்கிய முடிவும் குடும்பத்தினர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. பண தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம்.
கும்பம்
களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபட வேண்டிய நாள். கனிவாக பேசி காரியங்களை சாதித்து கொள்வது நல்லது. நண்பர்கள் சிலர் உங்களிடம் உதவி கேட்டு நச்சரிக்கலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
மீனம்
விரயங்களைச் சமாளிக்க வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உறவினர்கள் வழியில் ஓரளவு ஒத்துழைப்புகள் கிடைக்கும். பணியாளர் தொல்லை அகலும். ஆரோக்கியத்திற்காக செலவிடுவீர்கள்.