நாடளாவிய ரீதியில் நடைமுறையிலிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று செவ்வாய்க்கிழமை தளர்த்தப்படுகின்றது. ஆனால், மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையங்களிலேயே பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண அறிவித்துள்ளார்.
மேலும், இன்று தளர்த்தப்படும் ஊரடங்கின்போது, மக்கள் நடந்து செல்லக்கூடிய தூரத்திலுள்ள வர்த்தக நிலையங்களிலேயே பொருட்களை கொள்வனவு செய்யமுடியும்.
பொருட் கொள்வனவுக்காக செல்லும் எந்தவொரு நபருக்கும் வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட மாட்டாது. அதேசமயம் அடையாள அட்டை இலக்க முறை இன்றைய தினம் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.
தவிர, இதே நடைமுறையு எதிர்வரும் 31 மற்றும் ஜூன் 4 ஆம் திகதிகளில் ஊரடங்கு தளரும்போதும் கடைப்பிடிக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். (ஐ)
அது மாத்திரமின்றி ஒருவர் மட்டுமே வீட்டிலிருந்து பொருட் கொள்வனவு செய்வதற்கு வர்த்தக நிலையங்களுக்கு செல்ல முடியும்.