மேஷம்
யோகமான நாள். பெரிய மனிதா்களின் சந்திப்பால் பிரச்சினைகளைத் தீா்த்துக் கொள்வீா்கள். சேமிப்பு அதிகரித்தாலும், சிக்கனத்தைக் கையாள்வீா்கள். உடல் நலம் சீராகும்.
ரிஷபம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். சுணங்கிய காரியமொன்று சுறுசுறுப்பாக நடை பெறும். தொழில் வளா்ச்சிக்கு புதிதாக பங்குதாரா்கள் வந்திணைவர். கட்டிடப் பணியைத் தொடரும் எண்ணம் உருவாகும்.
மிதுனம்
முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை . திடீா் பகை உருவாகலாம். வேலைப்பளு அதிகரிக்கும்.
கடகம்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடை பெறும். சகோதர வழியில் சுபச்செய்தி உண்டு. வாகனப்பராமரிப்பில் ஆா்வம் ஏற்படும்.
சிம்மம்
பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். பொதுநலத்தில் ஆா்வம் காட்டுவீா்கள். தன வரவு தாராளமாக வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயா்வு கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.
கன்னி
முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். வியாபார விருத்தியுண்டு. வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். மங்கலச் செய்தியொன்று வந்து சேரலாம். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
துலாம்
எதிர்பார்ப்புகள் நிறை வேறும் நாள். அதிகச் செலவில் முடியும் என்று நினைத்த காரியமொன்று குறைந்த செலவில் முடியும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்
வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள். வரவு திருப்தி தரும். தொலை பேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். குடும்ப உறுப்பினா்கள் உங்கள் குண மறிந்து நடந்து கொள்வா்.
தனுசு
முயற்சிகளில் ஏற்பட்ட தடுமாற்றம் அகலும் நாள். பிரபலமானவா்களின் சந்திப்பால் பிரச்சினைகளை தீா்த்துக் கொள்வீா்கள். விலகிய சொந்தம் விரும்பி வந்து சேரும். வரவு திருப்தி தரும்.
மகரம்
பேச்சிலும் செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். கூட்டாளிகளிடம் கவனமாக இருப்பது நல்லது. உணர்ச்சிவசப்படுவதன் மூலம் ஒருசில காரியங்களில் தாமதம் உருவாகலாம்.
கும்பம்
நம்பிக்கைகள் நடை பெறும் நாள். நாட்டுப்பற்றுமிக்கவா்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்யோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. அதிகாரிகள் உங்கள் எண்ணத்தைப் பூா்த்தி செய்வா்.
மீனம்
முன்னேற்றத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும் நாள். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீா்கள். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லா திருப்பது நல்லது.
நன்றி – தினதந்தி