மேஷம்
வருமானம் திருப்தி தரும் நாள். வளர்ச்சிப் பாதையில் செல்ல சிலரிடம் ஆலோசனை கேட்பீர்கள். அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
ரிஷபம்
வளர்ச்சிக்கு வழிகாட்ட நண்பர்கள் முன்வரும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுத்து உதவும். உடன் பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம்.
மிதுனம்
பணியில் குறுக்கீடுகள் ஏற்பட்டு பதற்றம் உருவாகும் நாள். பொறுப்புகள் கூடலாம் சிரித்துப் பேசிய நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படும். வாகனப் பழுதுச் செலவுகளால் கையிருப்புக் கரையலாம்.
கடகம்
மனக்குழப்பம் அகலும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.
சிம்மம்
மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. பழைய கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள்.
கன்னி
தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக்கொள்ள வேண்டிய நாள். வாங்கல்-கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும்.
துலாம்
பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். பணவரவு திருப்தி தரும். உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
விருச்சிகம்
முக்கியப் புள்ளிகளின் ஆலோசனையால் முன்னேற்றம் கூடும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக முடியும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும்.
தனுசு
பம்பரமாகச் சுழன்று பணிபுரியும் நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் ரீதியாக எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேருவதில் தாமதம் உருவாகும்.
மகரம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். லட்சியங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆா்வம் காட்டுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்களோடு அலைபேசியில் அதிக நேரம் உரையாடுவீர்கள். எதிர்பார்த்த காரியம் இன்று கைகூடும்.
கும்பம்
வளர்ச்சி கூடும் நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும்.
மீனம்
மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள். நண்பர்களால் நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.