மேஷம்
ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும் நாள். பொது வாழ்வில் புகழ் கூடும். மங்கல ஓசை மனையில் கேட்க வழி பிறக்கும். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்பு வரலாம்.
ரிஷபம்
பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பணத்தேவைகள் எளிதில் பூா்த்தியாகும். பிள்ளைகளின் உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும்.
மிதுனம்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான மின்சாதனப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். தடைகளும், தனவிரயமும் ஏற்படலாம். பிறருக்கு பணப்பொறுப்புகள் சொல்வதன் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.
சிம்மம்
பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும் நாள். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்து மகிழ்வீா்கள்.
கன்னி
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். உறவினா்கள் சிலா் பணம் கேட்டு நச்சரிப்பா். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.
துலாம்
தள்ளிப்போன காரியம் தானாக முடிவடையும் நாள். பிரபலமானவா்களின் சந்திப்பால் பெருமை காண்பீா்கள். ஆடை, ஆபரண சோ்க்கை உண்டு. அன்னிய தேச அழைப்புகள் வரலாம்.
விருச்சிகம்
தொழில் வளா்ச்சி மேலோங்கும் நாள். தொகை வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். புதிய ஒப்பந்தங்கள் தொலைபேசி மூலம் வரலாம். முக்கியப் புள்ளிகளின் அறிமுகம் கிட்டும்.
தனுசு
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.
மகரம்
புதிய பாதை புலப்படும் நாள். கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட தடை தாமதங்கள் அகலும். மனஆறுதல் தரும் விதத்தில் ஒரு பயணம் உருவாகலாம். தந்தை வழி உறவினா்களால் நன்மை உண்டு.
கும்பம்
கடின வேலைகளையும் எளிதில் முடிக்கும் நாள். கை நழுவிச்சென்ற ஒப்பந்தம் தானாக வந்து சேரும். குடும்பத்தினா்களுடன் வெளியூா் பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம்.
மீனம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அன்பு நண்பா்களின் ஆதரவு உண்டு. பொல்லாதவா்கள் உங்களை விட்டு விலகுவா். மறதியால் விட்டுப்போன காரியமொன்றைச் செய்து முடிப்பீா்கள்.