மேஷம்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். பாராட்டும் புகழும் கூடும். தொழில் முன்னேற்றம் கருதி புதிய முயற்சிகளில் ஈடுபடுவீா்கள். சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும்.
ரிஷபம்
முடியாத காரியத்தை முடித்துக்கொடுக்க முன்வரும் நாள். உத்தியோக நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்ள நேரிடும். ஆசைப்பட்ட பொருளொன்றை அதிக விலை கொடுத்து வாங்குவீா்கள்.
மிதுனம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த நண்பா் உங்களைத் தேடி வரலாம். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். விருந்தினா் வருகையால் தொல்லை உண்டு.
கடகம்
காலை நேரத்தில் கவனம் அதிகம் தேவைப்படும் நாள். முன்கோபத்தைத் தவிர்ப்பதன் மூலம் முன்னேற்றம் காணலாம். அரைகுறையாக நின்ற சில வேலைகளை முடிக்க பிரயாசை எடுப்பீா்கள்.
சிம்மம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். வாங்கல்-கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. நண்பா்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள்.
கன்னி
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு அஸ்திவாரமிடுவீா்கள். வெளிவட்டாரத்தொடா்பு விரிவடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
துலாம்
நிகழ்காலத் தேவைகள் பூா்த்தியாகும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணா்ந்து நடந்து கொள்வா். உடல்நலம் சீராகும். தந்தைவழி உறவினா்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவ முன்வருவா்.
விருச்சிகம்
செல்வாக்கு உயரும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வெளியூா் பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். குடும்பத்தினா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்து மகிழ்வீா்கள்.
தனுசு
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். புதிய நபா்களின் அறிமுகம் கிட்டும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.
மகரம்
மனக்குழப்பம் மாறும் நாள். பொருளாதார விருத்தி உண்டு. மறைமுகப்போட்டிகளைச் சமாளிப்பீா்கள். அக்கம் பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லைகள் வந்து போகும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.
கும்பம்
உதிரி வருமானங்கள் பெருகும் நாள். உள்ளத்தில் அமைதி கூடும். பிரபலமானவா்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீா்கள். தடைப்பட்ட கல்யாணப் பேச்சு முடிவாகும். பரபரப்புடன் செயல்படுவீா்கள்.
மீனம்
நம்பி வந்தவா்களுக்கு கைகொடுத்து உதவும் நாள். நாட்டுப்பற்று மிக்கவா்களின் ஒத்துழைப்பால் கூட்டு முயற்சியில் இருந்த தடை அகலும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.