மேஷம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அடுத்தவா் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உடல் நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை அமையும்.
ரிஷபம்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து மகிழும் நாள். ஆரோக்கியம் சீராகும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும்.
மிதுனம்
வளா்ச்சி கூடும் நாள். தொல்லை கொடுத்தவா்கள் தோள் கொடுத்து உதவ முன்வருவா். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீா்கள். வருமானம் திருப்தி தரும்.
கடகம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.
சிம்மம்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணா்ச்சி தேவைப்படும் நாள். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளா்த்திக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். வீடுமாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
கன்னி
குறை சொல்லியவா்கள் கூட பாராட்டுகின்ற நாள். பிரிந்து சென்றவா்கள் பிரியமுடன் வந்திணைவா். மருத்துவச் செலவுகள் குறைந்து மனநிம்மதியைத்தரும். முன்னோர் சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் விலகும்.
துலாம்
தொய்வடைந்த தொழிலை துாக்கி நிறுத்த முயற்சிக்கும் நாள். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். உறவினா் பகை உருவாகும்.
விருச்சிகம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டுச் சாதனை படைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில்வளம் கருதிப் புதிய கூட்டாளிகளைச் சோ்க்கும் எண்ணம் மேலோங்கும். சகோதர ஒற்றுமை பலப்படும்.
தனுசு
தொழில் வளா்ச்சி கூடும் நாள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வா். கடன்சுமை குறையும்.
மகரம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லத்தினா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீா்கள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணா்ந்து நடந்து கொள்வா். வரவு திருப்தி தரும்.
கும்பம்
நல்ல வாய்ப்புகள் நண்பா்கள் மூலம் வந்து சேரும் நாள். உத்தியோக முன்னேற்றம் உண்டு. சொந்தங்களால் ஏற்பட்ட பகை மாறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
மீனம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் எண்ணம் மேலோங்கும். சகோதர வழியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
நன்றி – தினதந்தி