மேஷம்
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம்
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். சந்தித்தவா்களால் சந்தோஷம் கிடைக்கும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள விரும்புவீர்கள். எந்தக் காரியத்தையும் துரிதமாகச் செய்து முடிக்க இயலும்.
மிதுனம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். அன்பு நண்பா்கள் ஆதரவு தருவா். வருமானம் திருப்தி தரும். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வரலாம்.
கடகம்
நீண்ட நாள் எண்ணங்கள் நிறை வேறும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவா். சாதுர்யமாகச் செயல்பட்டு பொருள்வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும்.
சிம்மம்
நல்லவா்களைச் சந்தித்து நலம் காண வேண்டிய நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவா். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும்.
கன்னி
ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். உடல் நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடுவீா்கள். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
துலாம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த தொகை வந்து சேரும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். கல்யாண வாய்ப்புகள் கை கூடும்.
விருச்சிகம்
வரவு திருப்தி தரும் நாள். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் உள்ளவா்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நட்பால் நன்மை கிடைக்கும்.
தனுசு
புகழ் கூடும் நாள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் மேலோங்கும். அரை குறையாக நின்ற கட்டிடப் பணியை மீண்டும் தொடருவீர்கள்.
மகரம்
தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வீடு தேடிவரும். விலை உயா்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்புக்கிட்டும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வீர்கள்.
கும்பம்
நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். வளா்ச்சிக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இளைய சகோதரத்தால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மீனம்
எதிர்பார்ப்புகள் எளிதில் நிறை வேறும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். பக்கத்து வீட்டாரின் பகை மாறும்.
நன்றி – தினத்தந்தி