மேஷம்
சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தேக ஆரோக்கியம் சீராகும். தெய்வத் திருப்பணிகள் மீதியும் இன்று கை கூடும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு.
ரிஷபம்
பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும் நாள். பாதியில் நின்ற பணிகள் இன்று மீதியும் கை கூடும். வழக்குகள் சாதகமாக முடியும். வெளியுலகத் தொடா்பு வியக்கும் விதத்தில் அமையும்.
மிதுனம்
நட்பால் நன்மை கிட்டும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடி அமையும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழும் யோகம் உண்டு. குழந்தைகளால் குதூகலம் ஏற்படும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும்.
கடகம்
சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். வரவு திருப்தி தரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழில் தொடர்பாக நண்பர்களைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.
சிம்மம்
யோகமான நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பொது வாழ்வில் புகழ் கூடும். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளா்ச்சிக்கு உறுதுணை யாகும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.
கன்னி
ஆச்சரியப்படத்தக்க செய்திகள் வந்து சேரும் நாள். நண்பர்களின் சந்திப்பால் நலம் கிடைக்கும். நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும். பணத்தேவைகள் மதியத்திற்கு மேல் பூர்த்தியாகும்.
துலாம்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். குடும்பச்சுமை கூடும். கொடுக்கல்-வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை . நண்பர்களால் சிறு ஏமாற்றங்கள் உண்டு. உத்தியோகத்தில் பிரச்சினை ஏற்படலாம்.
விருச்சிகம்
நட்பால் நன்மை கிட்டும் நாள். நல்ல தகவல் இல்லம் தேடி வரலாம். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். தொலைபேசி வழித் தகவலால் தொழில் வளர்ச்சி கூடும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. ஆரோக்கியம் சீராகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மகரம்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வரவு திருப்தி தரும். அரசியல் வாதிகளால் அனுகூலம் உண்டு.
கும்பம்
எதிர்பாராத விரயத்தால் இன்னல்கள் ஏற்படும் நாள். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். தொழிலில் குறுக்கீடுகள் உண்டு. முக்கியக் காரியமொன்றிற்கு முடி வெடுக்க முடியாமல் தவிப்பீர்கள்.
மீனம்
எடுத்த முயற்சியில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். இல்லத்தில் சுபகாரியப் பேச்சு நல்ல முடிவிற்கு பணவரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறலாம்.
நன்றி – தினதந்தி