மேஷம்
ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும் நாள். நிலையான வருமானத்திற்கு வழிவகுத்துக் கொள்வீர்கள். பதவி வாய்ப்புகள் வந்து சேரும். தேவையில்லாத பிரச்சினைகளிலிருந்து விலகிக் கொள்வது நல்லது.
ரிஷபம்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பு கிட்டும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். எதிரிகள் விலகுவா்.
மிதுனம்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். பொருளாதார வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்கள் உறுதுணைபுரிவா்.
கடகம்
தனவரவு திருப்தி தரும் நாள். முன்பின் தெரியாதவர்கள் கூட உங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணைபுரிவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டு.
சிம்மம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். கொடுத்த வாக்கைகக் காப்பாற்ற கொள்கையைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அரசியல் அனுகூலம் உண்டு.
கன்னி
இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும் நாள். இல்லம் தேடிவரும் புதிய நபரால் ஏதேனும் பிரச்சினை வந்து சேரலாம். பிள்ளைகளை உங்கள் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது.
துலாம்
தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும் நாள். உதவி செய்வதாகச் சொன்ன நண்பா்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர். விரயங்கள் கூடும். எதையும் நன்கு யோசித்துச் செய்வது நல்லது.
விருச்சிகம்
வசதி வாய்ப்புகள் பெருகும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். அன்னிய தேசத்திலிருந்து எதிர்பார்த்த அனுகூலச் செய்திகள் வந்து சேரும்.
தனுசு
உத்தியோக முயற்சி கைகூடும் நாள். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களின் ஆதரவு கிடைக்கும். மறதியால் விட்டுப்போன பணிகளை மீண்டும் செய்யத் தொடங்குவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
மகரம்
வளர்ச்சி கூடும் நாள். எதிரிகள் விலகுவர். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். மருத்துவச் செலவு குறையும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம்
நேசம் மிக்கவர்களின் பாசமழை யில் நனையும் நாள். எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
மீனம்
அலைச்சல் அதிகரிக்கும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
நன்றி – தினத்தந்தி