மேஷம்: அசுவினி: பெண்களுக்கு உடல் நலப்பிரச்னைகளும், மனஅழுத்தமும் தீரும்.
பரணி: தடைபட்டு வந்த திருமணம், குழந்தை பாக்கியம் கை கூடி வரும்.
கார்த்திகை 1: பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள். நிம்மதி கூடும்.
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: குடும்பத்தில் சமீபத்திய நிகழ்ச்சியால் மகிழ்ச்சி பொங்கும்.
ரோகிணி: பொதுநல சேவையில் ஈடுபடுவீர்கள். மனஅழுத்தம் மறையும்.
மிருகசீரிடம் 1,2: அலுவலகத்தில் குரல் உயர்த்தாமல் பேசுவது நல்லது.
மிதுனம் : மிருகசீரிடம் 3,4: மேலதிகாரியிடம் உங்கள் பணியை விவரிக்க வாய்ப்பு வரும்.
திருவாதிரை: சிந்தனையில் தெளிவு உண்டாகும். சகோதரிகள் அனுசரிப்பர்.
புனர்பூசம் 1,2,3: நண்பரால் எதிர்கால விஷயம் பற்றி நன்மை அடைவீர்கள்.
கடகம்: புனர்பூசம் 4: மழலைச் செல்வம் மடியில் தவழப்போவது உறுதியாகும்.
பூசம்: வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறப்போகும் செய்தி வரும்.
ஆயில்யம்: அரசாங்கத்தின் தயவுடன் நடக்க வேண்டிய விஷயங்கள் நடக்கும்.
சிம்மம்: மகம்: பாஸ்போர்ட், விசா தொடர்பான முயற்சியில் நல்ல செய்தி வரும்.
பூரம்: மனதில் உள்ள விஷயங்களை யாரிடமாவது வெளிப்படுத்துவீர்கள்.
உத்திரம் 1: பல நாட்கள் கழித்துப் பழைய நண்பர் குழுவை சந்திப்பீர்கள்.
கன்னி: உத்திரம் 2,3,4: ஆறுதல் அளிக்கும் நபரின் சந்திப்பு நிகழ்ந்து நிம்மதி தரும்.
அஸ்தம்: யாரைப் பற்றியும் யாரிடமும் எந்த வம்பும் பேச வேண்டாம்.
சித்திரை 1,2: இழந்திருந்த பிரியமான பொருள் மறுபடியும் கிடைக்கும்.
துலாம்: சித்திரை 3,4: சட்டத்துக்கு புறம்பானவற்றை செய்வோருடன் இணைய வேண்டாம்.
சுவாதி: உங்களின் புது முயற்சிகள் வெற்றிப் பாதையை நோக்கி செல்லும்.
விசாகம் 1,2,3: மற்றவர்களின் சண்டைகளைத் தீர்த்து வைப்பீர்கள்.
விருச்சிகம்: விசாகம் 4: பிறர் சாதாரணமாக சொல்வதை குற்றமாக நினைக்காதீர்கள்.
அனுஷம்: பலவீனங்களை வென்று நிமிர்வீர்கள். பலநாள் சோர்வு தீரும்.
கேட்டை: புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபட்டு பலனடைவீர்கள்.
தனுசு: மூலம்: போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்து வென்று நிமிர்வீர்கள்.
பூராடம்: இனிமையான நாள். தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
உத்திராடம் 1: பெண்களுக்கு நேற்றுவரை இருந்த மனக்குறைகள் தீரும்..
மகரம்: உத்திராடம் 2,3,4: வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அமையும்.
திருவோணம்: கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த சிரமங்கள் தீரும்.
அவிட்டம் 1,2: நெருங்கியவருக்கு உதவி செய்து பாராட்டுப் பெறுவீர்கள்
கும்பம்: அவிட்டம் 3,4: சில பொறாமைக்காரர்களைக் சமாளிக்க வேண்டி வரும்.
சதயம்: உங்கள் மதிப்பு உயரும்படியான விஷயங்களைச் செய்வீர்கள்.
பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் ஏற்பட்ட சிக்கல் ஒன்று உங்களால் தீரும்.
மீனம்: பூரட்டாதி 4: தந்தையின் மனதில் இருந்த குறையைத் தீர்ப்பீர்கள்.
உத்திரட்டாதி: ஆரோக்யத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
ரேவதி: மிகுந்த முயற்சியுடன் நீங்கள் செய்த விஷயங்கள் வெற்றி தரும்.’
நன்றி – தினமலர்