மேஷம்
வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்கும் நாள். வெளியூர் பயணங்களால் விருப்பங்கள் நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். வருங்கால நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.
ரிஷபம்
தேக்கநிலை மாறித் தெளிவு பிறக்கும் நாள். தொழிலில் எதிர் பார்த்த லாபம் வந்து சேரும். புதியமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. கல்யாணக் கனவு நனவாகும்.
மிதுனம்
பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். உடனிருப்பவா்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு. நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
கடகம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத்தட்டும் நாள். வளா்ச்சி கூடும். வருமானம் கூடுதலாக வர புதிய வழிபிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். சுபச்செய்திகள் வந்து சேரும்.
சிம்மம்
நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிக்கும் நாள். வருங்காலநலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். தொழில் வளர்ச்சிக்கு தொல்லை தந்தவர்கள் விலகுவர்.
கன்னி
உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்பார்த்த பண உதவிகள் எளிதில் கிடைக்கும். இல்லத்தில் இனிய சம்பவமொன்று நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
துலாம்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வீடு, மனை வாங்கும் முயற்சி கைகூடும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடன் பணிபுரிவர்கள் உறுதுணையாக நடந்து கொள்வர்.
விருச்சிகம்
காரிய வெற்றிக்கு கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயம் உண்டு.
தனுசு
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். அதிகாரப் பதவியல் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். வீண் விரயங்களைத் தவிர்க்க சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.
மகரம்
மனதிற்கினிய சம்பவம் நடைபெறும் நாள். பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். பணவரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
கும்பம்
பம்பரம் போல சுழன்று பணிபுரியும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்புக் கொடுப்பர்.
மீனம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.தொழில் வெற்றி நடைபோடும்.
நன்றி – தினத்தந்தி