மேஷம்
புதியபாதை புலப்படும் நாள். அயல்நாட்டிலிருந்து அனுகூலச்செய்தி வந்து சேரும். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
மனக்குழப்பம் அகலும் நாள். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உறவினர்கள் ஆதங்கப்படுவர். தொழில் கூட்டாளிகளால் நன்மை உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்புக் கிட்டும்.
மிதுனம்
பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாள். அலுவலகப்பணிகள் துரிதமாக நடைபெறும். நேற்றைய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபாரத்தில் இருந்த மறைமுகப் போட்டிகள் விலகும்.
கடகம்
முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் பெருமை வந்து சேரும். கண்டும்,காணாமலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள்.
சிம்மம்
பெருமை கூடும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
கன்னி
தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். பழைய பிரச்சினைகளைத் தீர்க்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.
துலாம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். உள்ளத்தில் அமைதி கூடும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் கவனம் செலுத்துவீர்கள்.
விருச்சிகம்
நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். தொழில் வெற்றி நடைபோடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு
வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். ஆதாயம் கிடைக்கும் என நினைத்த காரியத்தில் விரயங்கள் அதிகரிக்கும்.குடும்ப பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மகரம்
விடியும் பொழுதே வியக்கும் செய்தி வந்துசேரும்நாள். செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு. வீட்டில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
கும்பம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வரவு திருப்தி தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். அடுத்தவர் நலனில் செலுத்திய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும்.
மீனம்
பணியில் இருந்த தொய்வு அகலும் நாள். கடந்த இரண்டுநாட்களாக நடைபெறாத காரியமொன்று இன்று நடைபெறும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வகையில் ஆதாயம் உண்டு.
நன்றி – தினத்தந்தி