மேஷம்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொகை கேட்டஇடத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் அகலும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும்.
ரிஷபம்
வரவும், செலவும் சமமாகும் நாள். வருங்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். நிச்சயித்த காரியங்களில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள்.
மிதுனம்
உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் நாள். சுபநிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் ரீதியாக ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும்.
கடகம்
விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும்நாள். எந்த முடிவெடுத்தாலும் அதிலிருந்து மாறாமல் இருப்பது நல்லது. கூட்டு வியாபாரம் லாபத்தைக் கொடுக்கும். அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும்.
சிம்மம்
சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இரு்தவர்கள் விலகுவர். மறைமுகப் போட்டிகள் அகலும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். பயணம் பலன் தரும்.
கன்னி
தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். திறமை பளிச்சிடும். குடும்பத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.
துலாம்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். முயற்சியில் வெற்றி கிடைக்க பிற இனத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். இடம்,பூமியால் லாபம் ஏற்படும். வியாபார விரோதம் விலகும்.
விருச்சிகம்
வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். உடல்நலம் சீராகும்.
தனுசு
மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும் நாள். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள் மனக்கசப்புகள் மாறும். உடனிருப்பவர்கள் மகிழ்ச்சியான செய்தியொன்றை கொண்டுவந்து சேர்ப்பா்.
மகரம்
வழிபாட்டினால் வளர்ச்சி காணவேண்டிய நாள். வரவைவிடச் செலவு இருமடங்காகும். வீண்பழிகள் அகல விழிப்புணர்ச்சி தேவை. சில காரியங்களைத் தொடங்க தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.
கும்பம்
திருமணத் தடை அகலும் நாள். அரைகுறையாக நின்ற காரியம் முடிவடையும். வருமானம் போதுமானதாக இருக்கும். ஸ்தல வழிபாடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.
மீனம்
மகிழ்ச்சி கூடும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்கும் சூழ்நிலை உருவாகலாம். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். வராமல் முடங்கியிருந்த பாக்கிகள் வந்து மகிழ்விக்கும்.