மேஷம்
திறமைகள் பளிச்சிடும் நாள். பிரியமானவர்களுடன் இருந்த பிரச்சினைகள் அகலும். வரவேண்டிய பணத்தைப் பேசி வசூலிக்க முற்படுவீர்கள். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.
ரிஷபம்
இல்லம் தேடி இனிய தகவல் வந்து சேரும் நாள். நிதிநிலை உயரும். ஆரோக்கியம் சீராகும். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும்.
மிதுனம்
குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது உங்கள் புத்திசாலித்தனமாகும்.
கடகம்
வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் நாள். யோசித்துச் செயல்படுவது நல்லது. வரவைவிடச் செலவு கூடும். பயணத்தை மாற்றியமைப்பீர்கள். வேலைப்பளு கூடும். ஆதாயமில்லாத அலைச்சல் உண்டு.
சிம்மம்
எதிர்பார்ப்புகள் அனைத்தும் எளிதில் நிறைவேறும் நாள். இல்லம் தேடிச் சுபச்செய்திகள் வந்து சேரும். தொழிலை விரிவு செய்ய முக்கியப் புள்ளிகளைச் சந்திக்க முற்படுவீர்கள். தேகநலன் சீராகும்.
கன்னி
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். வீடு வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
துலாம்
பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி தீட்டிய திட்டம் நிறைவேறும் நாள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் உதவி கிட்டும்.
விருச்சிகம்
முன்னேற்றம் ஏற்படும் நாள். வீட்டைச் சீரமைக்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். ஆரோக்கியத் தொல்லை அகலும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.
தனுசு
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைச் சமாளிப்பீர்கள். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேருவா். புதிய பாதை புலப்படும்.
மகரம்
அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுத்துதவும். வழக்கமான பணிகளை மாற்றியமைப்பீர்கள்.
கும்பம்
மருத்துவச் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும் நாள். தொலைபேசி வழியில் வரும் தகவல் தொல்லை தருவதாக அமையும். குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி செய்தும் நன்றி காட்ட மாட்டார்கள்.
மீனம்
குழப்பங்கள் அகலும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வீடு மாற்றம், இடமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். வரவு திருப்தி தரும். பணியாளர் தொல்லை அகலும்.