வளர்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் தரம் உயர வழிவகைசெய்துகொள்வீர்கள். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி வெற்றி பெறும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
தேகஆரோக்யத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காணவேண்டிய நாள். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாமலிருப்பது நல்லது.
நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டிய நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளைஅனுசரித்துச் செல்வது நல்லது. வீடுமாற்றச் சிந்தனை உருவாகும். தகுந்த ஓய்வு உடல்நலத்தைச் சீராக்கும்.
பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். பணியாளர் தொல்லை அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.
சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். திரும்பிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம்.
எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக்கொண்டுவந்து சேர்ப்பர்.
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. ஆரம்பத்தில் அச்சுறுத்தலாகதோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.
இனியசெய்தி இல்லம் தேடி வரும் நாள். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. வாங்கல் – கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
மனஉறுதியுடன் செயல்படும் நாள். தொலைதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறை வேறலாம். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும்.
நன்றி – மாலை மலர்