மேஷம்
நிதிநிலை உயரும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். பொதுவாழ்வில் ஈடுபட்டு புகழ் சேர்ப்பீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
ரிஷபம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்
முன்னேற்ற வாய்ப்புகள் பெருகும். மனபாரம் குறையும். பொருளாதார பிரச்னைகள் விலகும். பலரை சந்திப்பீர்கள்.
கடகம்
இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். வீட்டிற்குத் தேவையான அத்யாவசியப் பொருட்களை வாங்குவதன் மூலம் விரயம் ஏற்படும். பிரபலஸ்தர்களின் நட்பால் பெருமை சேரும்.
சிம்மம்
யோகமான நாள். யோசிக்காது செய்த முயற்சிகளில் வெற்றி கிட்டும்.அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். எதிர்காலம் இனிமையாக அமைய புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
கன்னி
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சி கைகூடும். பணியாளர் பிரச்சினை அகலும்.
துலாம்
கூடப்பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிட்டும் நாள். தொழில்முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் உறுதுணைபுரிவர். செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். பயணங்களால் பலன் உண்டு.
விருச்சிகம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். தொலைபேசிவழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
தனுசு
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டு. வீடுமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
மகரம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உற்றார். உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். கடன்பிரச்சினைகளைச் சமார்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.
கும்பம்
புதியபாதை புலப்படும் நாள். அடுத்தவர் நலனில் எடுத்த அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டுவரும் வாய்ப்பு உண்டு. தாய்வழி ஆதரவு திருப்தி தரும்.
மீனம்
மனக்கலக்கம் அகலும் நாள்.தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும்.