தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்துசேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உண்டு. பேச்சில் இனிமை கூடும்.
தட்டுப்பாடுகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கியமுடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள்.
யோகமான நாள். இல்லத்திற்கு தேவையானப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு.
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் கிடைக்கும். விட்டுப்போனவரன்கள் மீண்டும் வந்துசேரலாம். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சிதரும். உறவினர்கள் பகை மாறும்.
தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் மாறும். வருமானத்தை பெருக்கும் எண்ணம் மேலோங்கும்.
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிகையும் தேவை. சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம்.
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். உடன் பிறப்புகள் நீங்கள் கேட்டஉதவிகளைச் செய்ய முன்வருவர். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். தொழில் முயற்சியில் வெற்றி கிட்டும்.
செல்வாக்கு மேலோங்கும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனைவளத்தால் சிறப்படைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விவாக பேச்சுகள் முடிவாகலாம்.
நட்பால் நன்மை கிட்டும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களால் வீட்டுப்பிரச்சினை அகலும். பயணத்தால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சுபகாரியப் பேச்சு முடிவாகும்.
வருங்கால நலன்கருதி முயற்சி எடுக்கும் நாள். தொழிலில் புதியஒப்பந்தங்கள் வந்து சேரலாம். அலைபேசிவழித் தகவல் ஆச்சரியமளிக்கும். பூர்வீகசொத்து தகராறுகள் அகலும்.
நன்றி – மாலைமலர்